UPDATED : அக் 07, 2026 05:19 AM
ADDED : அக் 06, 2026 07:59 PM
புதுடில்லி: நேரு பிளேஸ் மாவட்ட மையப்பகுதியை தெருவோர வியாபாரம் மற்றும் விற்பனை தடை செய்யப்பட்ட மண்டலமாக டில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நேரு பிளேஸ் பகுதியில் நடைபெறும் தெருவோர வியாபாரம் மற்றும் விற்பனை தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கு நேற்று, நீதிபதிகள் பிரதிபா எம்.சிங் மற்றும் தினேஷ் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
நேறு பிளேஸ் மாவட்ட மையப்பகுதி, தெருவோர வியாபாரம் மற்றும் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 12க்கு பின் அங்கீகரிக்கப்படாத அனைத்து வியாபரிகளையும் அங்கிருந்து அகற்றி, நடவடிக்கை எடுக்க டில்லி மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. அவற்றை அகற்றிய பின், அங்கு தீயணைப்பு துறை ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
