UPDATED : அக் 06, 2026 11:31 PM
ADDED : அக் 06, 2026 08:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி, லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் சார்பில் லயன்ஸ் சங்கங்களின் மாநாடு தனியார் ஓட்டலில் நடந்தது.
மாநாட்டை, அமைச்சர் சிவக்கொழுந்த துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டிற்கு கண்ணப்பன் தலைமை தாங்கினார். தங்கதுரை, கமல்குமார் போத்ரா, அபிராமி, சங்கரநாராயணன், திருமால் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவர்னர் கனகதாரன், துணை மாவட்ட கவர்னர்கள் கமல் கிேஷார், சிவகாந்தன், ஜி.எம்.டி., ஒருங்கிணைப்பாளர் முரளி, ஜி.இ.டி., ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னாள் லயன்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் சம்பத் பங்கேற்று, லயன்ஸ் உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்களை தக்க வைத்தல் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல் குறித்து பேசினார்.
மாநாட்டில், சிறப்பாக செயல்பட்ட லயன்ஸ் சங்கங்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
