ADDED : டிச 14, 2024 04:09 AM
பெலகாவி: மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் மஞ்சேகவுடா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மஹாதேவப்பா கூறியதாவது:
அரசு சார்ந்த மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, 'மாணவர் ஊதியம்' என்ற பெயரில், மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.
அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் இந்த தொகையை, அவர்களின் செலவுகளை நிர்வகிக்கும்அரசிடமே வழங்கவேண்டும்.
ஆனால் பணத்தை அரசு திரும்பப் பெறுவதற்குள், பெரும்பகுதி பணத்தை மாணவர்கள் செலவிட்டு விடுகின்றனர். எனவே தொகையை அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் கணக்கில் பரிமாற்றம்செய்தால், மாணவர் விடுதிகளில் அடிப்படைவசதிகளை செய்ய உதவியாக இருக்கும்.
மைசூரு மாவட்டத்தில், 85 மாணவர் விடுதிகள் உள்ளன. இவற்றில் 70 விடுதிகளுக்கு, சொந்த கட்டடங்கள் உள்ளன. 15 விடுதிகள் வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. நிதி நிலைமையை தெரிந்து கொண்டு, நிலம் கிடைத்தால் மாணவர் விடுதிகளுக்கு சொந்தகட்டடம் கட்டப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

