சிவாஜி நுாலுக்கு மன்னிப்பு கேட்டது ' ஆக்ஸ்போர்டு ' பதிப்பகம்
சிவாஜி நுாலுக்கு மன்னிப்பு கேட்டது ' ஆக்ஸ்போர்டு ' பதிப்பகம்
ADDED : ஜன 08, 2026 01:02 AM
புனே: அமெரிக்க எழுத் தாளர் ஜேம்ஸ் லெய்ன் எழுதிய சத்ரபதி சிவாஜி தொடர்பான புத்தகம், 2003ல் வெளியான போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த புத்தகத்துக்கு எதிராக, 2004ல் சம்பாஜி பிரிகேட் என்ற மராத்தா சமூக அமைப்பினர் 150-க்கும் மேற்பட்டோர் புனேவில் உள்ள பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தை தாக்கி சேதப்படுத்தினர்.
இந்நிறுவனமே அமெரிக்க எழுத்தாளருக் கு தகவல்கள் வழங்கி உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் சயீத் மன்சர் கான் சார்பில் மன்னிப்பு கோரி, நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதி ல், 'மன்னர் சிவாஜி குறித்த புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93-வது பக்கங்களில் இடம்பெற்ற சில கூற்றுகள் உறுதிப்படுத்தப்படாதவை. இதற்காக மன் னிப்பு கோருகிறோம்' என கூறப்பட்டுள்ளது.

