இது தனது வாழ்நாளின் இருண்ட நாள் :வேதாந்தா குழும நிறுவன தலைவர் மகன்மறைவு குறித்து உருக்கமான பதிவு
இது தனது வாழ்நாளின் இருண்ட நாள் :வேதாந்தா குழும நிறுவன தலைவர் மகன்மறைவு குறித்து உருக்கமான பதிவு
UPDATED : ஜன 08, 2026 01:13 AM
ADDED : ஜன 08, 2026 01:06 AM

புதுடில்லி: வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்திவருகிறது வேதாந்தா குழுமம். இதன்தலைவர் அனில் அகர்வால். தமிழகத்திலும் ஸ்டெர்லைட் என்னும் பெயரில் வேதாந்தா செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் வயது 49. இவர் அமெரிக்காவில் பனி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது விபத்து ஒன்றில் சிக்கினார்.இதனையடுத்து அவர் நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துமவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறி வந்த நிலையில் அவருக்கு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இது குறித்து அனில் அகர்வால் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இது தனது வாழ்நாளின் இருண்ட நாள் எனவும்,என் அன்புக்குரிய மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டான். அவர் பனிச்சறுக்கு விபத்தில்சிக்கி குணமடைந்து வந்த நிலையில் மோசமான நிலை கடந்துவிட்டது என்று நாங்கள் நம்பினோம். ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது, ஒரு திடீர் மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துச் சென்றது. அக்னிவேஷ் ஒரு விளையாட்டு வீரர், இசைக்கலைஞர் இவ்வாறு அவர் பதிவில் கூறி உள்ளார்.

