தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆக்சிஜன் பற்றாக்குறை: ராஞ்சி - பெங்களூரு ஏர் இந்தியா விமானம் 5 மணி நேரம் தாமதம்

ஆக்சிஜன் பற்றாக்குறை: ராஞ்சி - பெங்களூரு ஏர் இந்தியா விமானம் 5 மணி நேரம் தாமதம்

ஆக்சிஜன் பற்றாக்குறை: ராஞ்சி - பெங்களூரு ஏர் இந்தியா விமானம் 5 மணி நேரம் தாமதம்


ADDED : ஆக 23, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஞ்சி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, ராஞ்சி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமானது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, பெங்களூருவில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்டது. வழக்கம் போல் பயணிகள் அதில் நிரம்பி இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அதில் இருந்த விமானி ஒருவருக்கு மூச்சுவிடுவதில் திடீர் சிரமம் ஏற்பட்டது.

நிலைமையை உணர்ந்த விமான பணியாளர்கள், அந்த பயணிக்கு உடனடியாக ஆக்சிஜனை அளித்தனர். அதன் பின்னர் பயணியின் உடல்நலம் சீரானது. ராஞ்சி வந்தடைந்ததும் அந்த பயணி பத்திரமாக வீடு திரும்பினார்.

இந் நிலையில் மீண்டும் இதே விமானம் பெங்களுருக்கு செல்ல தயாரானது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக உரிய பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், டில்லியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டன.

ஆக்சிஜன் நிரப்பிய பின்னர் உரிய சோதனை முறைகள் மேற்கொள்ளப்பட்டு விமானம் பெங்களூருவுக்கு விமானம், 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us