sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சபரிமலையில் படி பூஜை 2040 களபாபிஷேகம் 2027 வரை நிறைவு

/

 சபரிமலையில் படி பூஜை 2040 களபாபிஷேகம் 2027 வரை நிறைவு

 சபரிமலையில் படி பூஜை 2040 களபாபிஷேகம் 2027 வரை நிறைவு

 சபரிமலையில் படி பூஜை 2040 களபாபிஷேகம் 2027 வரை நிறைவு


ADDED : டிச 04, 2025 12:44 AM

Google News

ADDED : டிச 04, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலையில் படி பூஜைக்கு 2040 வரையும் களப பூஜைக்கு 2027 வரையும் முன்பதிவாகியுள்ளது.

சபரிமலையில் மிக முக்கியமானதும் அதிக செலவும் உடையது படி பூஜை. இதற்கான கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய்.

மாலையில் தீபாராதனைக்கு பின்னர் 18 படிகளையும் அலங்கரித்து ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து தேங்காய், பூ வைத்து தந்திரி ஒரு மணி நேரம் பூஜை நடத்துவார்.

மண்டல கால பூஜை நடைபெறும் 41 நாட்களிலும் படி பூஜை கிடையாது. மகர விளக்கு காலத்தில் மகரஜோதி முடிந்த இரண்டாவது நாள் முதல் நான்கு நாட்கள் படி பூஜை நடைபெறும்.

இதற்கான முன் பதிவு 2040 வரை நிறைவு பெற்றுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய பூஜை களபாபிஷேகம். சந்தன கட்டையை அரைத்து எடுக்கும் சந்தனத்தை பூஜை செய்து அதை தங்க குடத்தில் அடைத்து கோயிலை வலம் வந்த பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கான கட்டணம் 38,400 ரூபாய். இது 2027 வரை முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் 2028 ஜனவரிக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us