அஜித், அஸ்வின், நல்லி குப்புசாமி, செப் தாமு உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
அஜித், அஸ்வின், நல்லி குப்புசாமி, செப் தாமு உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
UPDATED : ஜன 27, 2025 07:01 AM
ADDED : ஜன 26, 2025 02:18 AM

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது.
பத்ம விபூஷண் விருது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், வரும் ஏப்ரல் மாதம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.