ADDED : டிச 24, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: உணவளிக்க வந்த பாகனை, யானை மிதித்துக் கொன்றது.
பெலகாவி மாவட்டம், அலகனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தாரப்பா பேவனுார், 28. ராய்பாக்கில் உள்ள கரிசித்தேஸ்வரர் கோவிலில் உள்ள 'துருவா' என்ற யானையின் பாகனாக இருந்தார்.
நேற்று காலை 7:00 மணிக்கு யானைக்கு உணவளிக்க அருகே சென்றபோது, தாரப்பாவை யானை மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்த ஹருகேரி போலீசார், கோவிலுக்கு வந்து விசாரித்தனர்.
பத்து நாட்களுக்கு முன்பு தான், பாகன் தாரப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.