தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஜம்மு – காஷ்மீரில் சுட்டுக்கொலை

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஜம்மு – காஷ்மீரில் சுட்டுக்கொலை

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி ஜம்மு – காஷ்மீரில் சுட்டுக்கொலை


ADDED : செப் 30, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்காம்: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஹாஷிம் மூசா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு – காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள பால்மைதான் என்ற பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அப்பகுதியில் நம் ராணுவத்தினரும், ஜம்மு –- காஷ்மீர் போலீசாரும் இணைந்து, ‘ஆப்பரேஷன் கோராக்’ என்ற பெயரில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், நம் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஹாஷிம் மூசா சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பாதுகாப்பு படை வட்டாரங்களின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட ஹாஷிம் மூசா, பாக்., ராணுவத்தின் சிறப்பு படை பிரிவான, ‘ஸ்பெஷல் சர்வீஸ் குரூப்’பில், பாரா- கமாண்டோவாக பணியாற்றியது தெரிய வந்தது. மேலும், 2025 ஏப்., 22ல், பஹல்காமில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், முக்கிய குற்றவாளிகளில் அவரும் ஒருவர் என்பதும் கண்டறியப்பட்டது. அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us