ADDED : ஏப் 27, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால், இந்தியா-பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
நேற்று முன்தினம் இரவு, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, நம் ராணுவ துருப்புகளை குறிவைத்து, பாக்., ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, நம் ராணுவ துருப்புகளை குறிவைத்து பாக்., ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு நம் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

