பாக்., ட்ரோனில் 'ஹெராயின்' பறிமுதல் செய்த பாதுகாப்பு படை
பாக்., ட்ரோனில் 'ஹெராயின்' பறிமுதல் செய்த பாதுகாப்பு படை
ADDED : அக் 13, 2024 07:39 AM
பெரோஷ்பூர் : பஞ்சாபில், நம் நாட்டின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் வாயிலாக ஹெராயின், கைத்துப்பாக்கி உள்ளிட்டவை கடத்தும் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூர் ஒட்டி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இதன் வாயிலாக ஊடுருவல்காரர்கள் வருவதை தடுக்கும் நோக்கில் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை, பாகிஸ்தான் எல்லையில் இருந்து நம் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி ட்ரோன் எனப்படும் சிறியரக விமானம் ஒன்று பறந்ததை பாதுகாப்புப் படையினர் இடைமறித்து தாக்கினர்.
இதில், 498 கிராம் எடையிலான ஹெராயின் போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கி உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ட்ரோன் பறந்த இடத்தில் கண்காணிப்பை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.