ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் : பா.ஜ., எம்.பி.க்களுக்கு இல்லையா ?
ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் : பா.ஜ., எம்.பி.க்களுக்கு இல்லையா ?
UPDATED : ஆக 07, 2024 07:02 PM
ADDED : ஆக 07, 2024 06:43 PM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.,க்களுக்கு பாக். தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா -பாக்., நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாக்., தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் பதவி விலகிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்., மூத்த தலைவர் சோனியா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழங்களை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக.,07) பாக்., தூதரகம் சார்பில் பார்லி.,லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எம்.பி. கபில்சிபல், சசிதரூர், உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஒருவருக்கு கூட அனுப்பி வைக்கவில்லை.