ADDED : மே 05, 2025 12:25 AM

நம் நாடு தெற்காசியாவில் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்து நிற்கிறது. தொழில்நுட்பம், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றிலும் சர்வதேச தரத்தில் உள்ளது. பாகிஸ்தானோ, தொடர் நெருக்கடிகள், வீழ்ச்சி அடையும் பொருளாதாரம் ஆகியவற்றால் திணறி வருகிறது.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
தொடர்பை துண்டித்து விட்டாரா?
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சமயத்தில், உத்தவ் தாக்கரே ஐரோப்பா சுற்றுப் பயணத்தில் இருந்தார். அதன் பின் மத்திய அரசின் அனைத்து கூட்டத்திலும் பங்கேற்கவில்லை, மஹாராஷ்டிரா தினத்துக்கும் வாழ்த்து சொல்லவில்லை. மாநில மக்களுடனான தொடர்பை அவர் துண்டித்துவிட்டாரா
மிலிந்த் தியோரா, ராஜ்யசபா எம்.பி., சிவசேனா
காதல் கடிதம்!
பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு சட்லெஜ் நதி நீர் பங்கீட்டிற்கான மேலாண்மை வாரியம் மத்திய மின் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஹரியானா பா.ஜ., முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அரசை நாடாமல் பஞ்சாப் முதல்வருக்கு காதல் கடிதம் அனுப்புகிறார்.
ரந்தீப் சுர்ஜேவாலா, ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்