சீன பீரங்கிகளை ஜம்மு- காஷ்மீர் எல்லையில் சோதனை செய்த பாகிஸ்தான்
சீன பீரங்கிகளை ஜம்மு- காஷ்மீர் எல்லையில் சோதனை செய்த பாகிஸ்தான்
ADDED : நவ 04, 2024 06:30 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பீரங்கி சோதனையை பாக்., நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளைகுடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் நீண்ட கால நட்பு நாடான துருக்கியுடன், நம் அண்டை நாடான பாகிஸ்தான், சமீப காலமாக ராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
வளைகுடா நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன், சீன ராணுவ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், எஸ்.எச்., 15 ரக பீரங்கிகள் போன்றவற்றின் சோதனையை, ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே, சமீபத்தில் பாக்., நடத்தியது.
துருக்கி ராணுவ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பீரங்கியின் சோதனையையும் பாக்., நடத்தியது. எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ திறன்களை மேம்படுத்துவதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.