ADDED : ஜன 24, 2026 05:45 AM

கதுவா: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப் பட்டார்.
குடியரசு தின விழா நெருங்கும் நிலையில், நாடு முழுதும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உ ள்ளது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பிலாவார் பகுதி யில், பயங்கரவாதிகள் பயன்படுத்திய பதுங்குக் குழிகள் சமீபத்தில் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதிகளில் ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு பதுங்கியிருந்த ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், நம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டார்.
இதைத்தொடர்ந்து, நம் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல், ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் பகுதியிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதுகாப்பு படையினர் தங்கள் தேடுதல் வேட்டையை நேற்றும் மேற்கொண்டனர்.
சமீபத்தில் சத்ரூ பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், நம் சிறப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 'பாரா ட்ரூப்பர்' ஒருவர் வீர மரணமடைந்தார்.

