ADDED : ஆக 22, 2025 12:48 AM

ஜம்மு: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது அழிக்கப்பட்ட பாக்., பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க, 300 மசூதிகள் பெயரில், பகிரங்கமாக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டு உள்ளது.
நன்கொடைகள் மூலம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட, ஜெய்ஷ் - இ - முகமது முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, சமூக வலைதளங்கள் வாயிலாக தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க ஜி -7 நாடுகளால் எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்தது.
இதனால், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு சென்று கொண்டிருந்த நன்கொடைகள் முடங்கின.
தற்போது, எப்.ஏ.டி.எப்., கண்ணில் மண்ணை துாவி, 'ஈஸி பைசா', 'சதாபே' போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.