'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'
'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'
ADDED : பிப் 19, 2024 06:58 AM
பெங்களூரு: 'லோக்சபா தேர்தல் வருவதால், சோதனைச்சாவடி பணிகளுக்கு, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வேண்டாம்' என, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம், பஞ்சாயத்து ராஜ் துறை விடுத்துள்ள கோரிக்கை:
லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வது உட்பட, அனைத்து பணிகளின் பொறுப்பை, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் ஏற்க வேண்டும்.
கோடை காலம் நெருங்குவதால், மக்களுக்கு குடிநீர் வழங்குவது, கணினி தொடர்பான பணிகளுக்கு, அவர்கள் அவசியம். நரேகா பணிகளை செயல்படுத்தும் பொறுப்பும் இவர்களிடம் உள்ளது. கூடுதலாக இவர்களுக்கு தேர்தல் பணிகளும் சேர்ந்துள்ளன.
பொதுவாக தேர்தல் நேரத்தில், வாகனங்களை கண்காணிக்க தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இம்முறை அவர்களை சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்க கூடாது. இவர்களுக்கு பதிலாக மாற்று அதிகாரிகளைநியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

