ADDED : அக் 02, 2024 02:43 AM
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், குர்தாஸ்பூர் மாவட்டம் ஹர்டோவல் கலான் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவி நேற்று ஏலம் விடப்பட்டது. ஆரம்ப கட்டமாக 50 லட்சம் ரூபாயில் துவங்கியது. இறுதியில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் இறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில், கிராம மக்களின் இந்த முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், ஏலத்தொகை கிராம வளர்ச்சிக்கு செலவிடப்படும் என மக்கள் கூறுகின்றனர்.
அதேபோல, பதிண்டா மாவட்டம் கெஹ்ரி பட்டர் கிராமத்தில் நடந்த ஏலத்தில் பஞ்., தலைவர் பதவியை ஒருவர் 60 லட்சத்துக்கு கேட்டார். அந்தத் தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பஞ்சாபில், 13,237 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 83,437 வார்டு உறுப்பினருக்காக தேர்தல் 5ம் தேதி நடத்தப்பட்டு அன்றே ஓட்டுகள் எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.