சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு!
சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு!
ADDED : பிப் 23, 2024 12:33 PM

புதுடில்லி: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்தும், சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள, 'எல் 1' எனப்படும், லெக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.