ADDED : நவ 11, 2024 05:28 AM

மைசூரு: ''ஒலிம்பிக்கில், அதிக தங்கப்பதக்கம் பெற்ற நாடுகளில் இந்தியாவும் இடம் பெற வேண்டும்,'' என பேட்மின்டன் வீராங்கனை திருப்தி முருகுண்டே தெரிவித்தார்.
மைசூரு சாமுண்டி விஹார் மைதானத்தில், 36வது அனைத்திந்திய போஸ்டல் பேட்மின்டன் போட்டியை, நேற்று பேட்மின்டன் வீராங்கனையும், 'மேஜர் தயான்சந்த் விருது' பெற்றவருமான திருப்தி முருகுண்டே துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
குழந்தைகள் எலக்ட்ரானிக் சாதனங்களுடன் விளையாடுவதை விடுத்து, வெளியே சென்று விளையாட, பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் திறமையை, நான்கு சுவற்றுக்குள் முடக்கிவிட வேண்டாம்.
ஒருவரின் வெற்றி, அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடாது. அனைத்து சவால்களையும் படிப்படியாக எதிர்கொள்ளும் போது, வெற்றியால் மகிழ்ச்சி கிடைக்கும். இந்தியாவை உண்மையான விளையாட்டு நாடாக மாற்ற, பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்போட்டியில் பங்கேற்க, 21 மாநிலங்களில் இருந்து 134 வீரர்கள், 60 வீராங்கனைகள் என 194 பேர் பங்கேற்றுள்ளனர். கர்நாடகாவில் இருந்து ஏழு வீரர்கள், நான்கு வீராங்கனைகள் இடம் பெற்று உள்ளனர்.
11_DMR_0023, 11_DMR_0024
நடப்பாண்டு, 36வது அனைத்திந்திய போஸ்டல் பேட்மின்டன் போட்டியை, வீராங்கனை திருப்தி முருகுண்டே துவக்கி வைத்து விளையாடினார். (அடுத்த படம்) போட்டியில் பங்கேற்ற பல மாநிலங்களின் வீரர், வீராங்கனைகள்.