நமோ ஹாட்ரிக் என்ற வாசகத்துடன் காவி உடையில் பார்லிமென்ட் வந்த மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர்
நமோ ஹாட்ரிக் என்ற வாசகத்துடன் காவி உடையில் பார்லிமென்ட் வந்த மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர்
UPDATED : பிப் 10, 2024 08:37 PM
ADDED : பிப் 10, 2024 08:30 PM

புதுடில்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ‛காவி டீசர்ட்டில்'
வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்.
பாராளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜன. 31-ல் கூடியது, பிப்1-ம்
தேதி பொதுபட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல்
செய்து உரையாற்றினார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர்
மோடி இரு அவைகளிலும் உரையாற்றினார். இன்று (10 ம் தேதி) கூட்டத்தொடரின் கடைசி நாள்
என்பதால் மோடி உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதே நேரம்
கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மத்திய இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ‛நமோ ஹாட்ரிக் வாசகத்துடன்
கூடிய காவி டீசர்ட்டில் வந்தார். அவரது வித்தியாச உடை அனைவரின்
கவனத்தையும் ஈர்த்தது.
அனுராக் தாகூர் கூறியது, ‛‛பிரதமர் மோடி
வரும் லோக்சபா தேர்தலில் 3வது வெற்றியை எதிர்நோக்கி பயணிக்கிறார்.
அதோடு பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது வளர்ந்த நாடாக உயர்த்தும்
நோக்கில் செயல்பட உள்ளார். இதனை உணர்த்தவே ‛நமோ ஹாட்ரிக்' டீசர்ட்
அணிந்துள்ளேன் என்றார்.