இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் இணையுங்கள் வாசகர்களே!
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் இணையுங்கள் வாசகர்களே!
UPDATED : அக் 04, 2025 07:25 PM
ADDED : அக் 04, 2025 07:16 PM

சென்னை: இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் 'அரட்டை'யில் தினமும் லட்சக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர். பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ள 'அரட்டை' செயலியை இன்றே டவுண்லோடு செய்யுங்கள், வாசகர்களே!
இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகுந்திருக்கிறது. தற்போது பிரபலமாக இருக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும், மேற்கத்திய நாட்டினரால் தயார் செய்யப்பட்டவை.
இவை, நமது சட்டங்களை பொருட்படுத்துவதில்லை; பயனர் தகவல்களை தங்கள் நாட்டில் சேகரிப்பது மட்டுமின்றி, அவற்றை பலவிதமான பயன்பாடுகளுக்கும் உட்படுத்துகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான், அமெரிக்க அதிபரான டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு தாறுமாறாக வரி விதிப்பை செய்து அதிருப்தியை சம்பாதித்தார்.
இதனால் மக்கள் மத்தியில் அந்நாட்டு தயாரிப்புகளான சமூக வலைதளங்களுக்கு மாற்று வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக, 'ஸோகோ' நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்த 'அரட்டை' செயலி மீது கவனம் திரும்பியது.
தமிழரான ஸ்ரீதர் வேம்பு தயாரித்து வெளியிட்டுள்ள இந்த செயலி, வாட்ஸ்அப், டெலிகிராமுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடியது. அவற்றில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன; அவற்றில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன.குறைந்த இணைய வேகம் இருக்கும் இடத்திலும், அரட்டை செயலி வேலை செய்யும். சாதாரண ஸ்மார்ட் போனில் கூட பயன்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு டிவியிலும் இதை பயன்படுத்த முடியும்.
இத்தகைய அம்சங்களால், நெட்டிசன்கள் பலரும் விரும்பி டவுண்லோடு செய்ய ஆரம்பித்தனர். பயன்படுத்திப் பார்த்த பலரும், அதிக 'டேட்டா' உறிஞ்சும் மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு மாற்றாக, 'அரட்டை' செயலி இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.இதன் காரணமாக, ஒட்டு மொத்த இந்தியர்களின் கவனமும் அரட்டை செயலி மீது திரும்பியது.
விளைவாக, நாளொன்றுக்கு சில ஆயிரம் புதிய பயனர்கள் சேர்ந்து கொண்டிருந்த 'அரட்டை' செயலியில் இப்போது தினமும் லட்சக்கணக்கான பேர் இணைந்து வருகின்றனர்.தங்கள் செயலி மீது மக்கள் கவனம் திரும்பியிருப்பதை புரிந்து கொண்ட ஸோகோ நிறுவனம், அதை மேம்படுத்த தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. பல்வேறு புதிய அம்சங்களையும் இணைக்க உள்ளது.எனவே, நீங்களும் இந்த செயலியில் இணைந்து சுதேசி சமூக வலைதள அனுபவத்தை பெறலாம்.