மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் குறைப்பா? ஆணையர் மறுப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் குறைப்பா? ஆணையர் மறுப்பு
ADDED : அக் 04, 2025 06:47 PM
சென்னை:'அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள், 235ல் இருந்து, 119 ஆக குறைக்கப்படவில்லை' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய, அரசாணை எண், 20க்கு முன் கண்டறியப்பட்ட பணியிடங்கள், எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை.
நேரடி நியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தது என கண்டறியப்படும் பணியிடங்களை, பதவி உயர்வுக்கு ஏற்ற பணியிடங்களாக கருத, துறையின் பணிசார் விதி களை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
இம்முறையில், பதவி உயர்வில், 4 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, தொடர்புடைய துறையில் உள்ள அனைத்து பணியிடங்களும் நிபுணர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு, பதவி உயர்விற்கான உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு அரசாணை வெளியிடப்படும்.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் எந்த வகையிலும் குறைக்கப் படவில்லை. தற்போது கூறப்படும், 119 பணியிடங்களுடன், 670க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.