'பார்லிமென்ட் முடங்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு' காங்., - எம்.பி., தரூர் எச்சரிக்கை
'பார்லிமென்ட் முடங்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு' காங்., - எம்.பி., தரூர் எச்சரிக்கை
ADDED : டிச 05, 2025 12:44 AM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்த புரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், 69, கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.,வையும் புகழ்ந்து வருகிறார்.
சசி தரூரின் செயல்கள், கட்சி மேலிடத்தை எரிச்சலடைய செய்துள்ளன.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், காங்., தலைவர் சோனியா தலைமையில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் சசி தரூர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர்., உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில், பார்லி.,யின் செயல்களை முடக்குவது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் விவாதத்துக்கு உரிய மிக உயர்ந்த இடமாக பார்லிமென்ட் திகழ்கிறது. ஆனால், சமீபகாலமாக அதன் மாண்பு குறைக்கப்பட்டு சீர்குலைந்து வருகிறது. இந்த போக்கு தொடர அனுமதிப்பது ஜனநாயக செயல்முறைகளை பலவீனப்படுத்தும்.
பார்லி.,யின் மதிப்பையும் குறைக்கும். தொடர்ந்து சபைகள் முடக்கப்படுவதால், நாட்டின் ஜனநாயகத்திற்கு சொல்லமுடியாத தீங்கு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

