பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
UPDATED : டிச 12, 2025 02:06 PM
ADDED : டிச 12, 2025 01:28 PM

புதுடில்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பார்லியின் இரு அவைகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டன.
பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் இன்று (டிச 12) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும், முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாஜ எம்பி அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்த இ-சிகரெட் குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபாவில் கூச்சல், குழப்பம் நிலவியது.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கேட்காததால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். ராஜ்யசபாவிலும் எஸ்ஐஆர் உள்ளிட்ட விவாதங்களை நடந்த வலியுறுத்தி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

