மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
மும்பையில் ரூ.3.89 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
ADDED : ஜன 01, 2026 11:22 AM

சென்னை: பஹ்ரைனிலிருந்து இருந்து மும்பைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.89 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணியை கைது விசாரிக்கின்றனர்.
மும்பை விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைனிலிருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, தங்கத் தூள் நிரப்பப்பட்ட 3.05 கிலோ எடையுள்ள 12 கேப்சூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை, 3.05 கிலோ எடையில் இருந்தன.
அதன் மதிப்பு, 3.89 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, அதிகாரிகள் மேலும் விசாரிக்கின்றனர். கடத்தி வந்த நபரின் பின்னணியில் இருக்கும் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

