ADDED : ஆக 15, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:கேரளா மாட்டுபட்டி அணையில் மழையை பொறுத்து அதிவேக படகுகள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணையில் மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம், மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அங்கு 5, 7 பேர் பயணிக்கும் அதிவேக படகுகள், 7 இருக்கைகளை கொண்ட பேமிலி படகு, 20 இருக்கைகள் கொண்ட பென்டன் படகுகள் இயக்கப்படுகின்றன. அதிவேக படகுகள் வரவேற்பு கொண்டவை. அந்த வகை படகுகள் இரு துறைகள் சார்பிலும் தலா 4 வீதம் இயக்கப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழை குறையும் வரை காத்திருந்து அதிவேக படகுகளில் பயணித்து மகிழ்ந்தனர்.