மாநாட்டுக்கு அரசு பஸ்கள் பயணியர் அவதி நீண்ட நேரம் காத்திருந்து பயணியர் அவதி
மாநாட்டுக்கு அரசு பஸ்கள் பயணியர் அவதி நீண்ட நேரம் காத்திருந்து பயணியர் அவதி
ADDED : மார் 12, 2024 03:33 AM

பாகல்கோட்,: லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, காங்கிரஸ் நடத்தும் வாக்குறுதித் திட்ட பயனாளிகள் மாநாட்டுக்கு அரசு பஸ்களை அதிக அளவில் இயக்கியதால், நேற்று பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் பஸ்கள் இன்றி அவதிப்பட்டனர்.
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, மாநில காங்கிரஸ் அரசு, அனைத்து மாவட்டங்களிலும் வாக்குறுதித் திட்டங்களால் பயனடைந்தவர்களின் மாநாட்டை நடத்தி வருகிறது.
இதுபோன்று நேற்று பாகல்கோட்டின் கலடகியில் வாக்குறுதி மாநாடு நடந்தது. இதில் பயனாளிகளை அழைத்து வருவதற்காக, 180 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டன.
வாரத்தின் முதல் நாளான நேற்று பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள், பணிக்கு செல்வோர் உரிய நேரத்தில் பஸ் கிடைக்காததால், எரிச்சல் அடைந்தனர்.
மாணவர்கள், பணிக்கு செல்வோர் விடுமுறை எடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள், மதியம் வரை காத்திருந்தும் பஸ்கள் வராததால், கடும் அவதிக்குஉள்ளாகினர்.
பாகல்கோட்டையில் தினமும் 645 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. மாநாட்டுக்கு 180 பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
'இன்று பாதாமியில் பயனாளிகள் மாநாடு நடப்பதால், அப்பகுதியில் பஸ்கள் இயக்கம் குறைவாக இருக்கும்' என, பயணியர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

