sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சட்ட விரோத கும்பல்களுக்கு பாஸ்போர்ட்: உதவியவர் கைது

/

 சட்ட விரோத கும்பல்களுக்கு பாஸ்போர்ட்: உதவியவர் கைது

 சட்ட விரோத கும்பல்களுக்கு பாஸ்போர்ட்: உதவியவர் கைது

 சட்ட விரோத கும்பல்களுக்கு பாஸ்போர்ட்: உதவியவர் கைது


ADDED : ஜன 24, 2026 05:51 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சட்ட விரோத கும்பல்களுக்கு பாஸ்போர்ட் வழங்க உதவியவர், போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் பாஸ்போர்ட் வாங்கிய நபர் ஒருவர் அளித்த தகவலை அடுத்து, அவரிடம் போலீசார், துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா சலீம் பிஸ்டல் மற்றம் நந்து கோஷ்டிக்கு, பாஸ்போர்ட் கிடைக்க உதவிய நபரை, டில்லி போலீசார் தேடி வந்தனர். டில்லி ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்த அவர், காசியாபாதில் உள்ள சித்தார்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார்.

சட்ட விரோதமாக அவரிடம் பாஸ்போர்ட் பெற்ற ஒருவர் அளித்த புகாரை விசாரித்த போலீசார், ஹர்தேஷ் என்ற அந்த நபரை தேடி வந்தனர். அவர் தற்போது தங்கியிருந்த முகவரியில், நேற்று அதிகாலையில் போலீசார் நடத்திய சோதனையில், அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்டு களாக இந்த சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் மறைந்து வாழும் பலருக்கு பாஸ்போர்ட் வழங்க, ஹர்தேஷ் உதவி புரிந்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us