sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் பொறுமையும் விவேகமும் பலனளித்தன: பிரதமர் கருத்து

/

எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் பொறுமையும் விவேகமும் பலனளித்தன: பிரதமர் கருத்து

எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் பொறுமையும் விவேகமும் பலனளித்தன: பிரதமர் கருத்து

எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் பொறுமையும் விவேகமும் பலனளித்தன: பிரதமர் கருத்து

9


ADDED : பிப் 04, 2026 01:02 AM

Google News

9

ADDED : பிப் 04, 2026 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா மீதான வரியை, 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு மத்தியில், பொறுமையும் விவேகமும் பலனளித்தன; இது, நம் நாட்டின் பொருளாதார எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது,” என, தெரிவித்தார்.

நல்லுறவு


இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை, 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் டில்லி யில் நேற்று நடந்தது.

அப்போது, ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்தி, நம் நாட்டின் மீதான வரி குறைப்பை சாத்தியப்படுத்திய பிரதமர் மோடிக்கு, எம்.பி.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் மத்தியில், பிரதமர் மோடி கூறுகையில், “அமெரிக்காவுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்தாலும், பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்பட்டது நல்ல பலனை அளித்துள்ளது.

''இ து, நம் நாட்டின் பொருளாதார எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. இது, அனைவருக்கும் பயனளிக்கும் முக்கிய முடிவு; எப்போதும் நம் நாட்டிற்கு சாதகமாகவே, தே.ஜ., கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது,” என்றார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து எம்.பி.,க்களுக்கு விளக்கினார்.

இந்த கூட்டத்திற்கு பின், பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமரின் தலைமையில் ஒன்பது வர்த்தக ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டிருப்பது பார்லிமென்ட் உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது.

கையெழுத்து


இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் மொத்தம் 39 நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன; அவை அனைத்தும், வளர்ந்த நாடுகள். இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக, நம் நாட்டில் மிகச்சிறந்த சூழல் நிலவி வருகிறது.

இதேபோல், சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் ந டந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இந்த வெற்றிகள், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் நம் கட்சியினரின் கடின உழைப்பால் கிடைத்தவை. இந்த வெற்றிகளால் நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. சிறந்த பணிகளை தொடர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us