கிழக்கு லடாக்கில் அமைதி, பாதுகாப்பு: இந்தியா,சீனா சிறப்பு உயர்மட்ட பேச்சு
கிழக்கு லடாக்கில் அமைதி, பாதுகாப்பு: இந்தியா,சீனா சிறப்பு உயர்மட்ட பேச்சு
ADDED : அக் 29, 2025 09:55 PM

புதுடில்லி:
கிழக்கு லடாக்கில் உள்ள எல்ஏசியில் அமைதி, நிலைத்தன்மையைப் பேண
இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டு, சிறப்பு ராணுவ உயர்மட்ட
பேச்சுவார்த்தை நடந்தது.
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி)அமைதி
மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில்,
இந்தியாவும் சீனாவும் புதிய சுற்று உயர்மட்ட ராணுவப் பேச்சுவார்த்தைகளை
நடத்தின.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 25 அன்று இந்திய எல்லைப் புள்ளியில் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
அக்டோபர்
25 அன்று கிழக்கு லடாக்கில் உள்ள மோல்டோ-சுஷுல் எல்லைப் பகுதியில் 23 வது
சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இந்த
பேச்சுவார்த்தை,ஆகஸ்ட் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையே சிறப்பு பிரதிநிதிகள்
பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு ராணுவத்தினரிடையே இதுபோன்ற முதல் சந்திப்பு
இதுவாகும்.
இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவது.
இரு
நாடுகளும் எல்லைப்பகுதியில் உள்ள நிலவி வரும் பிரச்னைகளை தீர்க்கவும்,
அமைதியை கூட்டாக பாதுகாக்கவும், ராணுவம், ராஜதந்திர வழிகளில் தொடர்ந்து
தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டன.
இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

