ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மோடி பேச்சு
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மோடி பேச்சு
ADDED : ஜூன் 04, 2024 08:53 PM

புதுடில்லி: ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என டில்லி பா.ஜ,, தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பிதரமர் மோடி பேசினார்.
இத்தேர்தலில் பா.ஜ., 239 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து டில்லி, பா.ஜ., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பா.ஜ.வினர் கொண்டாடினர்.
பின்னர் பிரதமர் மோடி பேசியது, இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தே.ஜ. கூட்டணி. பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி.தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். இது நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது.