ADDED : ஜூலை 20, 2025 11:33 PM

ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் போல் இன்றி, பாகிஸ்தான் தலைவர் போல் பேசுகிறார். நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், பாக்., ஆதரவு நிலைப்பாட்டுடன், நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார். நம் படைவீரர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடும் ராகுலுக்கு, மக்கள் பாடம் புகட்டுவர்.
சி.ஆர்.கேசவன், செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
உலக நாடுகளுக்கு தலைமை!
நம் மக்கள் ஜாதி, மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான், உலக நாடுகளுக்கு நாம் தலைமை தாங்க முடியும்; சமூக நீதியின் வாயிலாக இதை நாம் அடைய முடியும். நம் சமூகத்தில் நிலவும் தீண்டாமையை ஒழித்தால் மட்டுமே, இந்தியாவால் உலக நாடுகளுக்கு தலைமை தாங்க முடியும்; நம் நாட்டின் அழகே, பன்முகத்தன்மை தான். இதுவே, நம் நாட்டிற்கு பெருமை.
அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்,காங்கிரஸ்
இளைஞர்களுக்கு வேலை!
பீஹாரில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள், வாழ்வாதாரத்திற்காக, தங்கள் குடும்பத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் நிலை உள்ளது. கடின உழைப்பாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் உள்ள இத்தகைய இளைஞர்களுக்கு, உள்ளூரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது; அதற்குரிய தீர்வும் எங்களிடம் உள்ளது.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்