இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்
இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்
ADDED : அக் 21, 2024 04:29 PM

புதுடில்லி: ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.
இது குறித்து ஆங்கில டி.வி.,சேனலுக்கு அளித்த பேட்டியில் கேமரூன் கூறியதாவது:
இன்றைய உலகிற்கு பலமான பொருளாதார வளர்ச்சி, மிகுதியான ஜனநாயகம், பருவகால மாற்றத்திற்கு ஒரு பசுமை மாற்றம் ஆகிய மூன்றிலும் இந்தியா ஒளிர்கிறது.
பிரதமர் மோடியின் பேச்சு மிகப்பெரியது. அவரது ஆளுமை மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியால் 3வது முறையும் பிரதமராகி உள்ளார்.
ஆனால், எங்களால் 3வது முறை பிரதமராக முடியவில்லை.
அவரது திறமையால் உண்மையான மாற்றம், உண்மையான எண்ணங்களால் மிகச்சரியான பாதை ஆகியவற்றை இங்கு பார்க்கின்றோம்.
2ம் உலகப்போருக்கு பின்னர் உலகம் மாற்றம் நிறையவே கண்டிருக்கிறது.
இன்றைக்கு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது.
மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்கிற பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் கட்டாயம் இடம் தர வேண்டும்.
இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் தர வேண்டும் என்ற கேள்வி 2015ல் எழுந்தது.
2005ல் நான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைவராக இருந்தபோது, இதற்கான விவாதம் எழுந்தது. அப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இருந்த ரிஷி சுனாக் பிரதமராக இருந்தார். அவரிடம் வெளியுறவு செயலராக நான் பெருமையாக கருதுகிறேன்.
இந்தியாவிற்கு வரும் காலத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார்.