UPDATED : ஜன 23, 2024 09:45 AM
ADDED : ஜன 23, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில், சாமி தரிசனம் செய்ய, இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை நேற்று மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில், இன்று முதல், அயோத்தி ராமரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும், ராமரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

