பெங்களூரு சிறையில் ராஜ உபசாரம்; நடிகர் தர்ஷன் அறையில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி!
பெங்களூரு சிறையில் ராஜ உபசாரம்; நடிகர் தர்ஷன் அறையில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி!
ADDED : செப் 16, 2024 01:46 PM

பெங்களூரு: பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்த அறையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போன், 5 கத்திகள், 2 பெண் டிரைவ், ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
வாக்குவாதம்
தர்ஷனை பல்லாரி சிறைக்கு மாற்ற முயற்சித்தபோது, சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல், தகராறு செய்தார். இதையடுத்து மிகுந்த சிரமப்பட்டு அவரை வெளியேற்றிய பிறகு, அறையில் போலீசார் சோதனையிட்டனர்.
இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாம்சங் போன், 2 பென் டிரைவ்கள், ரூ.36,000 ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், 5 கத்திகள், மூன்று மொபைல் போன் சார்ஜர்கள், பீடிப் பொட்டலங்கள் மற்றும் தீப்பெட்டிப் பெட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி சிறைத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

