கேரள முதல்வர் கார் திடீர் விபத்து! அடுத்தடுத்து வந்த பாதுகாப்பு வாகனங்களும் மோதல்
கேரள முதல்வர் கார் திடீர் விபத்து! அடுத்தடுத்து வந்த பாதுகாப்பு வாகனங்களும் மோதல்
ADDED : அக் 28, 2024 08:42 PM

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது;
திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.
அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் டக்கென்று நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.
இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.