நிலச்சரிவுக்கு நிவாரண நிதி; நிற்காமல் 3 மணி நேரம் ஆடினார் மாணவி!
நிலச்சரிவுக்கு நிவாரண நிதி; நிற்காமல் 3 மணி நேரம் ஆடினார் மாணவி!
UPDATED : ஆக 09, 2024 12:29 PM
ADDED : ஆக 09, 2024 12:04 PM

திருவனந்தபுரம்: 'வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவதற்காக தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி தொடர்ந்து, 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார். அவர் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு, தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. நிவாரண நிதி திரட்டுவதற்காக, தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார்.
ரூ.15 ஆயிரம் நிவாரணம்
அதன் மூலம் திரட்டிய நிதி மற்றும் தன் சேமிப்பில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சிறுமி பரதநாட்டியம் ஆடிய, வீடியோவை பினராயி விஜயனிடம் காண்பித்தார். முதல்வர் பினராயியை சிறுமி சந்தித்த வீடியோ, எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.