அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷியை கைது செய்ய திட்டம்
அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷியை கைது செய்ய திட்டம்
ADDED : மே 28, 2024 07:49 PM

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மீது பா.ஜ., அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளதால் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டில்லி பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் டில்லி இவர், டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மீது கீழமை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 25 கோடி வரை பேரம் பேசி விலைக்கு வாங்கிட பா.ஜ., திட்டமிட்டு வருகிறது என சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் நாளை (மே.29) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.