ADDED : ஜூன் 23, 2024 03:07 AM

அடல் சேது பாலத்தில் எந்த விரிசலும் இல்லை.
அடல் பாலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. இணையத்தில் வெளியான படம் அணுகு
சாலை உடையது. காங்கிரஸ் பொய்களின் துணையுடன் பிரிவினையை உருவாக்க நீண்ட கால
திட்டம் வகுத்துள்ளது, இதிலிருந்து தெரிகிறது.
தேவேந்திர பட்னவிஸ்
மஹாராஷ்டிரா துணை முதல்வர்,
பா.ஜ.,
எதிர்காலம் பாதிப்பு!
பா.ஜ., ஆட்சியில், கல்வி மாபியாவின் ஊழல் சர்வ சாதாரணமாகி உள்ளது. ஏழு ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன. இரண்டு கோடி இளைஞர்களின் எதிர்காலம் பாழாகியுள்ளது. இளைஞர்கள் நலன் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
ஏன் இரட்டை நிலைப்பாடு?
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டால், ஆம் ஆத்மி அதை தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது. அதே நீதித்துறை ஜாமினுக்கு தடை விதித்தால், அதற்காக பா.ஜ.,வை குற்றம்சாட்டுகிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை கைவிடுங்கள்.
ஷாசியா இல்மி
செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

