'வீரமரணம் அடைந்த கணவர் தியாகி அந்தஸ்து தாருங்கள்'
'வீரமரணம் அடைந்த கணவர் தியாகி அந்தஸ்து தாருங்கள்'
ADDED : ஏப் 28, 2025 06:29 AM

கான்பூர்: ''எனது கணவர் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு, பெருமையுடன் தனது உயிரைத் தியாகம் செய்து, பலரது உயிரைக் காப்பாற்றினார். அவரது வீரமரணத்துக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும்,'' என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் மனைவி அஷான்யா கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த, 31 வயதான தொழிலதிபர் சுபம் திவேதி. பிப்., 12ல் அஷான்யாவை மணந்தார். ஏப்., 22ல் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட, 26 பேரில் அவரும் ஒருவர்.
அஷான்யா கூறுகையில், ''பயங்கரவாதிகளின் முதல் துப்பாக்கி குண்டு என் கணவரைத் தாக்கியது. நாங்கள், ஹிந்துவா அல்லது வேற்று மதத்தினரா என்று தெரிந்துகொள்ள, பயங்கரவாதிகள் நேரம் எடுத்துக்கொண்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், அங்கிருந்த பலர் தப்பி ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அதற்கு போதுமான நேரம் கிடைத்தது. எனது கணவர் உண்மையை கூறியதால், பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். எனது கணவர் பலரது உயிரை காப்பாற்றியுள்ளார்,'' என்றார்.

