ரூ.13,430 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் ஆந்திராவில் துவக்கி வைத்தார் பிரதமர்
ரூ.13,430 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் ஆந்திராவில் துவக்கி வைத்தார் பிரதமர்
ADDED : அக் 17, 2025 12:33 AM

கர்னுால்: ஆந்திராவில், 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவங்கி வைத்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, கர்னுால் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், 13,430 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நி கழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்திட்டங்களில் தொழில், மின் பரிமாற்றம், சாலைகள், ரயில்வே, ராணுவ உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வை அடங்கும்.
கர்னு ால் மூன்றாவது துணைமின் நிலையத்தில், 2,880 கோடி ரூபாய் முதலீட்டில் மின் பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே போல், 4,920 கோடி ரூபாய் மதிப்பில், கர்னுாலில் ஓர்வக்கல் தொழிற்பேட்டை மற்றும் கடப்பாவில் கொப்பர்த்தி தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் , 960 கோடி ரூபாய் செலவில், சப்பாவரம் - -ஷீலாநகர் வரையிலான ஆறு வழி பசுமை நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம்; 360 கோடி ரூபாய் மதிப்பில், கிருஷ்ணா மாவட்டத்தில், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் சார்பில் தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் துவங்கி வைக்கப்பட்டது.
இது தவிர, 1,730 கோடி ரூபாய் செலவில், 'கெயில் இந்தியா லிமிடெட்' சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாகுளம்- - அங்குல் இயற்கை எரிவாயு குழாய் பாதை, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.