ADDED : ஏப் 23, 2025 02:53 PM

புதுடில்லி:காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, நாளை உ.பி., செல்லவிருந்த பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை(ஏப்.,24) லக்னோ செல்வதாக இருந்தது. அங்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைக்க இருந்தார். ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டில்லி திரும்பிய பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவம் காரணமாக, நாட்டு மக்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் லக்னோவை சேர்ந்தவரும் உயிரிழந்துள்ளார். இந்த நேரத்தில் எந்த கொண்டாட்டங்கள் அல்லது பொது நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்காது என்பதால், மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மோடியின் உ.பி., பயணம் ரத்து செய்யப்பட்டது.