நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
நாட்டுக்கு பெருமை; ஜிஎஸ்எல்வி விண்ணில் நிலை நிறுத்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
ADDED : அக் 31, 2026 07:45 AM

புதுடில்லி: ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் ஏவுதல் வெற்றி அடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.
நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெறுவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
