தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்
தமிழக வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா; பிரதமர் புகழாரம்
ADDED : பிப் 24, 2025 05:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தமிழக வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவின் விவரம் வருமாறு; ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கமுள்ள தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரவலாக போற்றப்படுகிறார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நல முயற்சிகளுக்கு அவர் என்றுமே ஆதரவாக இருந்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

