ADDED : ஆக 12, 2025 03:10 AM
கீவ்: உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்தினார்.
கிழ க்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வ ரும் 15ம் தேதி அலாஸ்காவில் பேச்சு ந டத்த உள்ளனர் .
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சு நடத்தினார்.
'மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். சாத்தியமான அனைத்து பங்களிப்பு மற்றும் உக்ரைனுடனான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது' என, சமூக வலைதளப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.