sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இலக்குகளை அடைய புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்; பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

/

இலக்குகளை அடைய புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்; பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இலக்குகளை அடைய புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்; பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இலக்குகளை அடைய புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்; பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

6


UPDATED : ஜன 15, 2026 01:36 PM

ADDED : ஜன 15, 2026 09:49 AM

Google News

UPDATED : ஜன 15, 2026 01:36 PM ADDED : ஜன 15, 2026 09:49 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்தப் பொங்கல் திருநாள், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும்,' என்று தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களை ஒன்றிணைத்து நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.

இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பாமகவின் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us