ADDED : டிச 13, 2025 07:18 AM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டிசம்பர் 20ம் தேதி மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள்(எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்பட உள்ளது. நான்கு நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 20ம் தேதி மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். நதியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

