பிரதமர் மோடி இன்று காசிக்கு செல்கிறார்; 20 ஆயிரம் கோடி நிதிக்கு அனுமதி
பிரதமர் மோடி இன்று காசிக்கு செல்கிறார்; 20 ஆயிரம் கோடி நிதிக்கு அனுமதி
ADDED : ஜூன் 18, 2024 09:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 3வது முறை வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார். இங்கு இரவில் கங்கை நதியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
காலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். வருமானம் குறைவான விவசாயிகளுக்கு உதவும் விதமாக நிதி வழங்கும் திட்டத்திற்கென முதல்கட்டமாக ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கிட அனுமதி அளிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் 9. 25 கோடி பேர் பயன்பெறுவர்.
மேலும் தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நடக்கிறது.